பரோட்டா சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா ? அதிர்ச்சி தகவல்

Ticker

6/recent/ticker-posts

பரோட்டா சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா ? அதிர்ச்சி தகவல்

 பரோட்டா  

Parotta side affect



இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் மிகவும் பிடித்த உணவாக புரோட்டா மாறி உள்ளது. கடந்த இருபது வருடங்களாக இந்திய ஹோட்டல்களில் தனக்கென்று ஒரு இடத்தை பரோட்டா பிடித்துள்ளது. இதில் பல்வேறு விதமான தீமைகள் இருந்தாலும் இதன் சுவை உணர்வு நம் மக்களை பரோட்டாவுக்கு அடிமையாக்கி உள்ளது என்றே சொல்லலாம்.ஏனென்றால் பரோட்டாவை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. மேலும் இதன் சுவையே பல்வேறு மக்களின் உயிரை பறிக்ககூடிய பிடித்த உணவு பொருளாக உள்ளது. அனைவருக்கும் இவ்வளவு பிடித்த உணவு இப்படி மனித உயிரை கொல்லும் என்பதை பற்றி கீழ்வரும் பதிவுகளில் விரிவாக காணலாம்.


எப்போதும் நாம் அதிகமாக விரும்பி சாப்பிட கூடிய உணவுகளுக்கு பின்னால் ஒரு தீமை ஒளிந்து கொண்டு இருக்கும். இதை நாம் தான் அறிந்து கொள்ள வேண்டும். பரோட்டா அதிகம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமிபகாலமாக மைதாவில் தயாரிக்கபடும் அனைத்து உணவுகளும் நம் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இதுபோல  ஒரு பக்கம் செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும். மக்கள் இந்த உணவுகளை சாப்பிடுவதால் பாதிப்பவரும் என்று தெரிந்தே சாப்பிடுகின்றனர். மைதாவின் தீமைகள் பற்றி போதுமான விழிப்பணர்வு இல்லாதே இதற்க்கு முக்கிய காரணம்.


www.tamilantech.com


மைதா மாவில் தயாரிக்கபடும் அனைத்து உணவுகளும் மனிதர்களுக்கு தீஙகு விளைவிக்க கூடியவை. இதில் எந்த வித நன்மையும் கிடையாது. இதில் அதிகபடியான கொழுப்பு சத்து உள்ளது. இதனால் நாம் பரோட்டாவை ஓரு வேளை உணவாக சாப்பிட்டாலும் அடுத்த வேளை பசி உணர்வு இருக்காது. ஏனென்றால் இவை நமது குடலில் செரிமானம் ஆக பல மனி நேரம் எடுத்துகொள்கிறது.இதனால் ஆரம்பநிலையில் செரிமான  பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. 


மைதா எப்படி தயாரிக்கபடுகிறது




மைதா பொதுவாக கோதுமையில் இருந்து தயாரிக்கபடுகின்றன. ஆனால் மைதா கோதுமையின் கழிவு என்று கூறபடுகிறது. கோதுமையில் இருந்து அனைத்து சத்துக்களும் பிரிக்கபட்டு கடைசியா வர கூடிய பொருள் தான் மைதா. இவை பொதுவா விலங்குகளுக்கு உணவாக வழங்கபட்டது. மைதாவின் நிறம் மஞ்சள் ஆனால் இதில் பென்சாயில் பெராக்ஸைடு கலக்கபட்டு வெண்மையாக மாற்றபடுகிறது. மேலும் "அலாக்ஸான்" என்ற வேதிபொருளும் கலக்கபட்டு வெண்மை நிறத்தில் மாற்றபடுகிறது. இந்த Benzoyl peroxide நமது உடலில் சருமத்தில் உள்ள பாக்டேரியாக்கள் அழிக்கபடுகின்றன. இந்த வேதிபொருள் அழகுநிலையங்களில் அதிகமாக பயன்படுத்த படுகின்றன. இந்த வேதிபொருள் நாம் பயன்படுத்தகூடிய Soab, cream, pimple cream, facewash, spot treatment, dailydeep, cleanser/mask இது போன்ற தயாரிப்புகளில் இந்த Benzoyil proxide கலக்கபடுகின்றன.


பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் :

மைதாவில் கலக்கபடும் அலாக்ஸான் என்ற வேதிபோருள் நமது உடலில் நீரிழிவு நோயை உண்டாக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வேதிபொருள் உடலின் கனைய சுரப்பியின் இயக்கத்தை சரிவர இயங்கவிடாது. இதன் மூலம் நமது உடலின் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த முடியாமல் போகிறது.இதன் மூலம் இன்சுலின் சுரப்பது தடைபடுகிறது. இதன் காரணமாக நமது உடலில் நீரிழிவு நோய் எளிதாக ஏற்படுகிறது.

இந்த பரோட்டாவில் எந்தவித நார்சத்தும் கிடையாது, அதிகமாக கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. இந்த மைதாவில் செய்யபடும் உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டால் இதயத்திற்க்கு செல்லகூடிய இரத்த நாளங்களில் அதிகமாக கொழுப்பு படிகிறது மற்றும் இரத்த அழுத்தம், உடல்பருமன், மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதினரையும் தாக்குகிறது. மாரடைப்பு வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இந்த பரோட்டா உள்ளது.  



இவை digestive problems, Risk of diabetes, chronic disease, Heart problems, danger of obesity, inreases Bad cholesterol, cancer, Extra Acidity problem, chronic inflammation, இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.


பரோட்டாவை சாப்பிடும் சிறிது சிறுதாக செரிமான பிரச்சனயில் ஆரம்பித்து இறுதியாக மாரடைப்பு   ( Heart attack ) க்கு சென்றுவிடும். எனவே பரோட்டா சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

மைதாவில் தயாரிக்கபடும் அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நாம் உண்ண கூடிய உணவுகளில் மைதா கலக்கபட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வதே மிக கடினம். மைதா கலப்படம் இல்லாத உணவுகளை  தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் மைதா பல்வேறு உணவுகளில் பயன்படுத்தபடுகின்றன. குறிப்பாக ,  பிரட், பிஸ்க்கட், அல்வா, பன், பப்ஸ், சமோசா, கேக் வகைகள், பீஸா போன்றவை மைதாவில் தயாரிக்கபடுகின்றன.




எனவே ஏதோ ஒரு வடிவில் இந்த மைதா நமது உடலுக்குள் சென்றுவிடுகிறது. எனவே மைதா கலந்த  உனவை சாப்பிடுவது நாமே நமது உடலுக்கு விஷம் வைத்து கொள்வது போன்று ஆகிவிடும்.

எனவே மைதா கலந்த உணவை முற்றிலும் தவிறுங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.

நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்