மின்சார வாகணத்தின் நிறைகள் குறைகள்

Ticker

6/recent/ticker-posts

மின்சார வாகணத்தின் நிறைகள் குறைகள்


 தற்ப்போது மாறி வரும் சூழலுக்கு ஏற்ப்ப நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் மாற்றங்கள் அவ்வபோது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதேபோல் தான் நாம் பயன்படுத்தும் மோட்டார் வாகனங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருகின்றன.

 பெட்ரோல் டிசல் எரிபொருள்களின் விலை ஏற்றத்தால் நாம் மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள படுகின்றோம். இதன் காரணமாகவே மின்சார வாகணங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிக அளவில் உள்ளன. என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்களாம்.

Electric vehicle நன்மைகள் என்ன ?

1) மின்சார வாகணங்களில் தேய்மானம் என்பது மிகவும் குறைவு

2) இந்த வாகணங்களில் பேட்டரி மற்றும் மோட்டார் சர்வீஸ் செலவுகள் மட்டுமே உள்ளது

3) 6 மனி நேரம் சார்ஜ் செய்தால் 300km கிலோமீட்டர் வரை செல்ல முடியும்

4) பெட்ரோல் டீசல் வாகணங்களை விட இவைகள்  சத்தம் இல்லாமல் செல்லகூடியவை.

5) எரிபொருள் செலவு மிகவும் குறைவு

6) இந்த வாகணங்களில் அதிர்வு மிக மிக குறைவாகவே காணபடுகன்றன.

7) இந்த வாகணங்களில் எடை மிக குறைவாக இருக்கும். இதனால் மின்சார வாகணங்களை  கையால்வது அனைவருக்கும் எளிது.

8) மழை காலங்கள் குளிர் காலங்களில் Starting பிரச்சனை என்பதே வராது.

9) இவைகள் புகையை வெளியிடுவதில்லை,  இதனால் ஒரு  தனி நபர் மூலமாக சுற்று சூழல் மாசு ஏற்படுவது இல்லை.

10) எட்டு வருடம் வறை மோட்டார்களுக்கு வாரன்ட்டி தரபடுகின்றன. மேலும் பேட்டரிக்கு 4 வருடம் வாரன்ட்டிகள் கொடுக்கபடுகின்றன. 

11) இதில் பராமரிப்பு செலவு என்பது குறைவு




Electric vehicle ல் ஏற்படகூடிய பிரச்சனைகள் :

1) பைக்கில் பயன்படுத்தபடும் 1 கிலோ வாட் பேட்டரியின் விலை 50000 ரூபாய் ஆகும். மேலும் மூன்று வருடங்கள் மட்டுமே இந்த பேட்டரி சரியான முறையில் இயங்கும்.

2) பெட்ரோல் டீசல் வாகணங்களை விட 25 % முதல்  30% வரை விலை அதிகமாகவே இருகின்றன.

3) இந்த வாகணங்களில் நீன்ட தூரம் பயனிக்க முடியாது. ஏனென்றால் இதன் சார்ஜ் திறன் குறைந்து விடும். மீண்டும் இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மனி நேரம் ஆகும்.

4) மேலும் இந்த வாகணங்களுக்கான  சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் இல்லை. எனவே இதனை நம்பி நீன்ட தூரம் பயனிப்பது முடியாது.

5) இந்த வாகணங்களை வேகமாக இயக்கினால் நீங்கள் செல்ல கூடிய தூரம் முழுமையாக செல்ல முடியாது. ஏனென்றால் இதில் உள்ள சார்ஜ்,  வண்டி  வேகமாக செல்லும் போது வேகமாக சார்ஜ் திறன் குறையும்.

6) கார்களில் பயன்படுத்தபடும் பேட்டரி திறன் Dc 400 volt வரை வரகூடும்.  இதனை அலட்சியமாக கையான்டால் இவை மனிதர்களுக்கு உயிர் இழைப்பை கூட ஏற்படுத்திவிடும்.

7) வண்டியில் பயன்படுத்தபடும் மோட்டார் watts வாடஸ்ஸை பொறுத்தே வண்டியின் வேகம் தீர்மானிக்க படுகிறது.

8) இந்த வண்டியின் வாழ்நாள் 8 வருடங்கள் மட்டுமே. அதன் பின் ?

9) இதற்க்கு மறுவிற்பனை மதிப்பு கிடையாது. ஆதாவதை நீங்கள் வாங்கிய மின்சார வாகணம் மீண்டும் வேறு ஒரு நபர்க்கு நீங்கள் விற்றால் அதனை வாங்குபாரா ? பதில் இல்லை

10) மழைகாலங்களில் இதன் பயன்பாடு எப்படி இருக்கும். பேட்டரியில் தன்னீர் புகாமல் இருக்குமா. 

11) EB கட்டணம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 100 யூனிட் வரை மட்டுமே  இலவசம். 500 யூனிட்டுக்கு மேல் போனால். EB கட்டனம் இரட்டிப்பு சார்ஜ் கணக்கிடபடும். 

12) இந்த வண்டியை அனைத்து இடங்களிலும் நம்மால் சர்வீஸ்க்கு விட முடியாது. சிரிய பிரச்சனையை கூட சரிய செய்ய போதுமான சர்வீஸ் சென்டர்கள் தற்ப்போது வரை இல்லை.

13) இதில் பயன்படுத்தபடும் பேட்டரிகள்  லித்தியம் சார்ந்தவை . எனவே இவை எளிதாக வெடிக்ககூடிய தன்மை பெற்றவை. இதனை பயன்படுத்துவது என்பது மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

14) இந்த வாகணங்கள் சத்தமே இல்லாமல் செல்லும். இதுவே விபத்துக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

15) இந்த வாகணங்கள் அனைத்தும் ஒரு லட்ச்சத்துக்கு மேலே உள்ளன. இதானால் அனைவரும் மின்சார வாகணங்களை வாங்குவது என்பது முடியாத காரியம்.

16) மழை மற்றும் குளிர் காலங்களில் இதன் சார்ஜ் திறன் தானகவே குறைய வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் அடிக்கடி சார்ஜ் செய்ய நேரிடும்

17) இரவு நேரங்களில் மின்சார  வாகணங்களை பயன்படுத்தும் போது. Light  விளக்குகளை கட்டாயம் பயன்படுத்தி செல்லும் நிலையில் இருப்போம். இதன் மூலம் பேட்டரியில் சார்ஜ் வேகமாக குறையும். இதனால் நாம் செல்லகூடிய தூரத்தை கூட சரியாக போக முடியாது.

18) மின்சார கார்களில் நீங்கள் ஏசியை பயன்படுத்தினால் கூட அவை அனைத்துமே பேட்டரியில் உள்ள சார்ஜ் மூலமாக மட்டுமே இவைகள் இயங்கும். மேலும் நீங்கள் காரில் பயன்படுத்தகூடிய Ac, Tv, mobile charge, power window, central lock , remote control, navigation system, இவை அனைத்தும் ஒரு பேட்டரியை மட்டுமே நம்பி உள்ளன. பேட்டரியின் சார்ஜ் குறைய குறைய இவைகளின் இயக்கமும் குறையும். 

19) பெட்ரோல் டீசல் கார்களில் ஏசி  பயன்பாடு காரின் இன்ஜின் கூட இனைக்கபட்டு இருக்கும். இதானால் பேட்டரியின் சார்ஜ் குறையாது. உதாரனமாக சொல்ல போனால். காரின் இன்ஜின் ஆன் செய்தால் காரின் பேட்டரி சார்ஜ் ஆகி கொண்டே தான் இருக்கும். வண்டி வேகமாக செல்லும் போது பேட்டரி சார்ஜ் ஆகி கொண்டே இருக்கும். ஆனால் மின்சார வாகணங்களில் அப்படி ஏதும் கிடையாது.

நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்