Bluetooth எப்படி செயல்படுகின்றது ? ஒரு விரிவான விளக்கம்.

Ticker

6/recent/ticker-posts

Bluetooth எப்படி செயல்படுகின்றது ? ஒரு விரிவான விளக்கம்.

 


  தற்ப்போது உள்ள சூழ்நிலையில் நாம் அன்றாடும் வாழ்வில் பயன்படுத்தகூடிய எலக்ட்ரானிக் Device-ல் அனைத்திலும் புளுடூத் (bluetooth) பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அது எவ்வாறு செயல்படுகின்றது என்பதனை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Bluetooth என்று பெயர் எப்படி வந்தது.

    1989 ERICSSON என்ற நிறுவனம் wireless கருவியை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கியது. இதன் விளைவாக 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் விடாமுயற்ச்சியின் காரணமாக 1994 ம் ஆண்டு wireless  JAAP HAARTSEN என்பவரால் இந்த கருவி கண்டுபிடிக்கபட்டது. அதன் பின் மேலும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்ச்சியில் ERICSSON, INTEL, NOKIA போன்ற பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டன. 

மேலும் இந்த நிறுவனங்கள் தனி தனியாக தன்னுடைய ஆய்வில் ஈடுபட்டதால் அவர்கள் தனி தனி பெயர்களை அவர்கள் வைத்தனர். ஆதாவது ERICSSON இதனை Mc Link என்று குறிப்பிட்டனர். INTEL இதனை Biz Rf என்றும், Nokia இதனை Low Power Rf என்ற பெயரிலும் வெவ்வேறாக குறிப்பிட்டனர். ஆனால் பல்வேறு நிறுவனங்கள் இதனை வெவ்வேறு  பெயர்களில் குறிப்பிடபடுவதை விட ஒரு குறுப்பிட்ட பெயரில் பொதுவாக அழைக்கபட்டால் சரியாக இருக்கும் என தெரிவிக்கபட்டது. இதன் காரனமாக SIG (Special Interest Grroup) என்ற குழு ஒன்று ஆரம்பிக்கபட்டது. இந்த குழுவில்  பல்வேறு நிறுவனங்களான ERICSSON, NOKIA, INTEL, LG, SAMSUNG, போன்றவை அடங்கும். 

அந்த நேரத்தில் Intel நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த JIM HARDACH என்பவர் நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துள்ளார். அப்போது அந்த புத்தகத்தில் பத்தாம் நூற்றான்டின் மன்னணான KING HARALD BLUETOOTH என்பவர் டென்மார்க்கையும் நார்வேயையும் ஒன்றாக இனைத்துள்ளார். இதனை படித்த பிறகு  JIM KARDAC மனதில் ஒன்று தோன்றியுள்ளது. நாமும் இரண்டு Device ஐ ஒன்றாக இனைக்க முயற்ச்சித்து வருகின்றோம். எனவே அந்த மன்ணன் உடைய பெயரை வைத்தால் என்ன என்று தனது குழுவிடம் அந்த செய்தியை தெரிவித்துள்ளார். 

அவர்களும் அந்த மன்ணனின் பெயரை வைத்துவிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே அந்த மன்னணின் பெயரான KING HARALD BLUETOOTH  என்பதில் உள்ள Bluetooth என்ற பெயரை மட்டும் வைத்தனர். அதன் பிறகு அந்த தொழில்நுட்பத்தை Bluetooth என்றே அழைத்து வருகின்றோம். மேலும் முதன் முதலில் wireless கருவியை கண்டுபித்தது ERICSSON என்பதால் இவருடைய பெயரையே Bluetooth ன் உடைய தந்தை (Father of Bluetooth)  என்று அழைக்கபடுகின்றது. 


Bluetooth எப்படி  செயல்படுகின்றது ?

    Bluetooth என்பது  குறைந்த அளவு வீச்சு ரேடியோ அலைகள் (Short Range Radio Waves) மூலமாக செயல்படுகின்றது. ஆதாவது நாம் இரண்டு எலக்ட்ரானிக் Device ஐ யும் Bluetooth மூலமாக இனைத்தால் அவை ரேடியோ அலைகள் மூலமாக இனைக்கபடும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் ரேடியோ அலைகள் குறைந்த அளவு தூரத்தில் மட்டுமே செயல்படும். அதனால் இதை Short Range Radio Waves என்று அழைக்கபடுகின்றது.

மேலும் இது 2.4GHZ Range அளவிலே செயல்படுகின்றன. அதாவது ஒரு நொடிக்கு 240 கோடி ரேடியோ அலைகளை அது பரிமாற்றம்  ( Transfer) செய்கின்றது. இதனால் தான் நம்மால் Bluetooth Device மூலமாக நம் வீட்டில் உள்ள எந்த ஒரு எலக்ட்ரானிக் Device ல் இனைக்கபட்டு இருந்தாலும் தடையின்றி அவைகள் செயல்படுகின்றன. 

உதாரணமாக சொன்னால் நம் மொபைல் போன்  ஒரு Bluetooth Speaker output device  ல் இனைக்கபட்டு இருக்கும் போது நாம் மொபைல் போனில் உள்ள பாடலை Play செய்யும் அடுத்த வினாடியில் அந்த bluetooth Speaker ல் அதன் பாடல்கள் ஒளிக்க செய்யும். 

இதே போன்றுதான் Bluetooth Mouse, Key board , bluetooth Gps, bluetooth wristBand, Smart Watch, Hometheatre, Bluetooth Monitor, bluetooth headphones, Bluetooth Printer, Blutooth Cameras, Bluetooth selfi sitck போன்றவை செயல்படுகன்றன. 

இந்த Bluetooth ன் உடைய திறன் 1milli watts ஆகும்.


Bluetooth ன் உடைய நன்மைகள்.


    ஒரு Bluetooth Device ன் மூலமாக எட்டுவிதமான எலக்டாரானிக் Device ஐ இனைக்கமுடியும். உதாரனமாக உங்கள் லேப்டாப்பில் ஒரு Bluetooth Mouse இனைக்கபட்டு இருக்கும் போது அதில் Bluetooth Key Borad ம் இனைக்கபட்டு இருக்கும். இவ்வாறாக பல்வேறு சாதனங்களை (Device) நம்மால் இனைக்க முடியும். மேலும் ஒவ்வொரு எலக்ட்ரானிக் Device க்கும் அதற்கென்று தனிதனி முகவரிகள் (Address) கொடுக்கபட்டு இருக்கும் அதன் மூலமாக அவைகள் இனைக்கபடும். இதனால் நம்மால் எளிதில் தனிதனியாக ஒவ்வொரு Device ஐ யும் Pair செய்து கொள்ள முடிகின்றது. மேலும் Device உள்ள bluetooth ON செய்தாலே இனைப்பை தானகவே ஏற்படுத்தி கொள்ள முடிகின்றது. இந்த Bluetooth Device க்கு குறைந்த அளவு battery திறன் போதுமானது.


Bluetooth ன் உடைய Disadvantages : 

●Bluetooth குறைந்த அளவு தூரம் உள்ள ரேடியோ சிக்கனலை மட்டுமே அனுப்புகின்றன. இதானால் அதிக தூரத்தில் இவைகள் செயல்படாது (Low band Width) 

● மேலும் புளூடூத்தில் இனைக்கபடும் ஒரு எலக்ட்ரானிக் Device எந்த நேரத்திலும் அதன் இனைப்பு தானாக துண்டிக்கபடலாம் (Disconnect)

●Bluetooth ஐ பயன்படுத்தும்போது அதனை மற்றவர்களால் எளிதாக Hack செய்யபடும்.

●Bluetooth Device க்கு என்று ஒரு தனிபட்ட (security) எந்தவித password  ம் பயன்படுத்த படுவதில்லை.


Bluetooth மூலம் உடல் ஆரோக்கியம் பாதிப்படையுமா ?

    புளூடூத்தில் இருந்து வரகூடிய ரேடியோ அலைகள் Non Ionizing Radiation என்று சொல்லபடுகின்றது. எனவே இது எந்தவித உடல் நல பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அதுவே Ionizing Radiation ஆக இருந்தால் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆதாவது Ionizing Radiation X - Ray க்களில் பொதுவாக  பயன்படுத்தபடும் என்பது குறிப்பிடத்க்கது.


எதுவாக இருந்தாலும், நாம் பயன்படுத்தகூடிய எந்த ஒரு  (Electronoic Device) எலக்ட்ரானிக் கருவியையும் அளவோடு பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்து என்பது மருத்துவர்களின் அறிவுரை..


நன்றி !

கருத்துரையிடுக

0 கருத்துகள்