எந்த வகை மெமரி ( Memory card ) கார்டு வாங்க வேண்டும்

Ticker

6/recent/ticker-posts

எந்த வகை மெமரி ( Memory card ) கார்டு வாங்க வேண்டும்

Memory card ஐ SD கார்டு என்றும் அழைக்கலாம்.இந்த வகை மெமரி கார்டுகளை அனைவரும் நம் மொபைல் போனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த SD card ன் உடைய விரிவாக்கம் Secure digital என்று அழைக்கபடுகிறது. இந்த வகை மெமரிகார்டு 2007 களில் இருந்து இந்தியா முழுவதும் பயன்பாட்டில் வர தொடங்கியது. இந்த வகை மெமரி கார்டுகளின் விலை பொறுத்தவரை அதன் சேமிப்பு திறனை பொறுத்தே நிர்ணயக்க படுகின்றன.


மெமரி கார்டுகளின் பிரிவுகள் :

மெமரி கார்டுகளில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன. ஆதாவது SD, SDHC, SDXC என்று இவைகள் தனி தனியாக வகைபடுத்த படுகின்றன. SD என்பது secure Digital என்பதாகும். அதேபோல் SDHC என்பது secure digital high capacity மற்றும் SDXC என்பது Secure digital extended capacity என்று அழைக்கபடுகிறது. SD கார்டு என்று அழைக்கபடும் மெமரி கார்டுகள் 1999ஆண்டுகளில் இருந்தே பயன்பாட்டில் இருந்தன. 



மேலும் அந்த காலகட்டத்தில் பயன்படுத்தபட்ட மெமரி கார்டு குறைவான சேமிப்புதிறன் உடையதாக இருந்தன. உதாரனமாக சொல்ல போனால் 64 Mb, 128Mb, மற்றும் 512 mb  memory card பயன்படுத்தபட்டு வந்தன. அதன் பின்பு 2004 ம் ஆண்டுகளில் 1Gb memory கார்டுகள் அறிமுகம் படுத்தபட்டன. பிறகு அதுவே 2Gb, 4Gb, 8Gb, 16, Gb என்று அதன் அளவு அதிகரித்து கொண்டே சென்றது. தற்ப்போது 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் இதன் மெமரி அளவு 64 Gb, 128Gb, 256, 512Gb மற்றும் 1TB வரை ஆன்லைனில் கிடைக்கின்றது.

எந்த வகை மெமரி கார்டு சிறந்தது 




Memory Card பொறுத்தவரை Class 2, Class 4, Class 6, class 10 என்று நான்கு வகைகள் உள்ளன. இந்த குறியீடுகள் அனைத்தும் மெமரி கார்டுகளின் வேகத்தை குறிக்கின்றன. உதாரனமாக சொல்ல போனால் உங்கள் Memory card Class 10 ஆக இருந்தால் இதில் நீங்கள் 1Gb உடைய Files Transfer செய்யும் போது அதன் வேகம் ஒரு செகன்டிற்க்கு 10Mb ஆக இருக்கும். இந்த வேகத்தில் உங்கள் Mobile போனுக்கு Files Transfer செய்யபடும். மேலும் இந்த வகை மெமரி கார்டுகள் இன்னும் Advance ஆக சென்று UHS என்ற முறை அறிமுக 




படுத்தபட்டுள்ளது. அதாவது UHS என்பது Ultra high speed ஐ குறிக்கும். இந்த வகை மெமரி கார்டுகளில் U என்பது அதன் மேல் இருக்கும் அதில் Phase 1 என்றும் Phase 3 என்றும் அதில் குறிப்பிடபட்டு இருக்கும். இதில் phase 1என்பது ஒரு செகன்டுக்கு இதன் வேகம் (Speed ) 50Mb முதல் 100Mb வரை files ஐ Transfer செய்யமுடியும். அதேபோல் Phase 3என்பது ஒரு நொடிக்கு இதன் வேகம்  300Mb வரையில் இருக்கும். எனவே Memory Card ஐ பொறுத்து அதன் வேகம் நிர்னயக்கபடுகிறது. 

எனவே மெமரி கார்டுகளை வாங்கும் போது குறைந்த விலையில் கடைகளில் கிடைக்கின்றன என்று வாங்கிவிடகூடாது. அது எந்த Class வகையை சார்ந்தது. அதேபோல் அது UHS Type ஐ சார்ந்ததா என்று அதன் மேல் உள்ள குறியீடுகளை பொறுத்தே நாம் மெமரி கார்டுகளை வாங்கவேண்டும்.

நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்