Internet - எப்படி செயல்படுகிறது ? விரிவான ஒர் அலசல்

Ticker

6/recent/ticker-posts

Internet - எப்படி செயல்படுகிறது ? விரிவான ஒர் அலசல்

How internet works


what is internet


what is internet

 INTERNET என்பது பொதுவாக நம் வீட்டில் உள்ள கணினியின் மூலமாகவோ அல்லது மொபைல் போன் வழியாக நாம் தேடகூடிய தகவல்களை இனையத்தின் (Internet ) மூலமாக நம்மால் எளிதில் பெறமுடியும். நாம் தேடகூடிய தகவல்கள் எப்படி  நாம் தேடகூடிய நேரத்திற்க்கு விரைவாக நம்முடைய கணினிக்கு அல்லது மொபைல் போனுக்கு எப்படி வந்தடைகின்றன என்பதை தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

How the internet works

பொதுவாக நாம் Internet ல் தேடகூடிய தகவல்கள் அனைத்தும் ஒரு செகன்டில் நம் கணினியின் திறையில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இவைகள் அனைத்தும் ஆயிரம் கணக்கான மயில்கள் தொலைவில் உள்ள DATA CENTRE ல் இருந்து உங்கள் Computer க்கு வந்தடைய இரண்டு வழிகள் உள்ளன. எளிதான வழியில் இதனை செய்ய Data Center ல இருந்து Antenna  மூலமாக satellite க்கு  சிக்னல் அனுப்பி, satellite ல் இருந்து அந்த சிக்னலை நாம் பயன்படுத்தகூடிய Mobile Atenna  க்கு அனுப்புவதன் மூலம் செயல்படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனென்றால் நம்முடைய புவிபரப்பில் இருக்ககூடிய DATA CENTRE க்கும் Satellite க்கும் இடையே உள்ள தூரம் 44000கிலோ மீட்டர் ஆகும். இதன்காரணமாக இந்த Data சென்றடைய அதிகநேரம் எடுத்துகொள்ளும். இதனால் பல்வேறு அப்ளிகேஷன்களை விரைவாக பயன்படுத்த முடியாது. இதன் விளைவாக Internet இனையத்தை இதன் வழியாக பயன்படுத்துவது சாத்தியமற்றது. இரண்டாவது வழி என்னவென்றால் Optical Fiber Cable மூலமாக Data Center யையும் Network Antenna வையும் இனைக்கின்றனர். இதனால் நாம் பயன்படுத்தகூடிய மொபைல் போனுக்கு Network Antennas மூலமாக இந்த Data க்கள் Mobile Phone ல் மற்றும் கணினியில் பெறமுடிகின்றது.



OPTICAL FIBER எப்படி செயல்படுகிறது ?


fiber optic cable
                                                                                    fiber optic cable


இப்போது நாம் பயன்படுத்தகூடிய இனைய (Internet) செயல்பாடுகள் அனைத்தும் Optical fiber cable மூலமாகவே தான் பயன்படுத்தி வருகின்றோம். உதாரனமாக நீங்கள் Youtube ல் ஒரு வீடியோ பார்த்துகொண்டு இருக்கீர்கள் என்றால் அந்த வீடியோ ஏதோ ஒரு Data centre ல் உள்ள SSD ல் சேமிக்கபட்டு இருக்கும். இந்த SSD, Server ல் உள்ள internal storage devices யாக செயல்படும். ஆதாவது Server என்பது ஒரு கணினி போன்று நாம் கேட்க்கூடிய தகவல்கள் இந்த server SSDல் சேமித்து வைக்கபட்டு இருக்கும் அந்த தகவல்களில் நம்முடைய தகவல்களை மட்டும் தேடி கன்டுபிடித்து நமக்கு அனுப்பி வைக்கின்றன. மேலும் இவைகள் அனைத்தும் IP Address மூலமாக நம்முடைய கணினிக்கு சரியாக வந்தடைகின்றன. 


How does fiber optics work

இந்த optical Fiber cable ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கொண்டுசெல்ல இவற்றை பூமிக்கு அடியில் பதிக்கபடுகின்றன. மேலும் கடலுக்கு  அடியில் பாதுகாப்பாகவும் இவைகள் பதியபடுகின்றன சில நேரங்களில்  மலைகளுக்கு மேலும் இவைகள்  பதிக்கபட்டு கொண்டு செல்ல படுகின்றன. இவ்வாறாக ஒவ்வொரு நாடுகளையும் இந்த Opticale Fiber Cable மூலமாக உலகம் முழுவதும் இனைக்கபட்டு இருக்கின்றன.


IP Address என்றால் என்ன ?


IP Address


நாம் பயன்படுத்தகூடிய எந்த டிவைஸ் ஆக இருந்தாலும் சரி அதற்க்கென்று ஒரு IP Address கொடுக்கபட்டு இருக்கும். அதாவது நாம் பயன்படுத்தகூடிய  Router ஆக இருந்தாலும் சரி அல்லது Mobile phone, Computer, Laptop இவைகள் அனைத்துக்கும் தனிதனி IP Address கொடுக்கபட்டு இருக்கும் இதனால் தான் நம்முடைய Device க்கு சரியாக வருகின்றன. மேலும் நம்முடைய service provider தான் நம்முடை IP Address ஐ தீர்மானிக்கின்றன. இதேபோல் தான் Data Center க்கும் IP Address இருக்கும், இந்த Data Center ல்  தான் அனைத்து இனையதளங்களும் ( internet ) சேமிக்கபடுகின்றன.

 இந்த இனையதளங்களுக்கு என்று தனிதனி IP Address கொடுக்கபட்டு இருக்கும். உதாரனமாக Amazon, Flipkart, Youtube, Facebook என்று சொல்லி கொண்டே போகலாம். மேலும் இந்த IP  Address நம்மால் நினைவில் வைத்துகொள்ள முடியாது எனவே இதற்க்காதான் டொமைன் ( Domain Name ) பெயர் கொண்டுவரபட்டது இதன் மூலமாக அந்த Web Address ஐ எளிதாக நினைவில் கொண்டு வரமுடியும். உதாரனமாக Youtube.com என்பதை நம்பர் வடிவில் 2401:2300:34b8:5665:2345:037:8466:1C18 இப்படி நம்மால் நினைவில் வைத்துகொள்ள முடியாது எனவேதான் Domain கொண்டுவரபட்டது. இந்த Domain Name Access செய்வதன் மூலமாக இந்த IP Address ஐ யும் நம்மால் Access பன்ன முடிகின்றது. எனவே Youtube,Facebook,Google போன்ற Server ஐ Access செய்ய அவர்களுக்கென்று தனிதனி Data Center களை வைத்துள்ளனர்.மேலும் நாம் அனுப்பகூடிய Domain Name உடைய IP முகவரியை இன்டர்நெட் எப்படி கண்டுபிடிக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழகூடும். நாம் எப்படி ஒருவருடைய பெயரை வைத்து டெலிபோன் நம்பரை கண்டுபிடிக்கின்றோம் அதேபோல் இன்டர்நெட் IP முகவரியை கண்டுபிடிக்க DNS Server ஐ பயன்படுத்துகின்றது. இந்த DNS server ஐ நிர்வகிக்க தனிதனி Organisation செயல்படும். இல்லை என்றால் நாம் பயன்படுத்த கூடிய SERVICE PROVIDER இதனை நிர்வகிக்கலாம். நாம் கணினியில் ஒரு இனையதளத்தை தேடினால் இந்த இனையதளத்தின் IP முகவரியை கண்டுபிடிக்க DNS Serverக்கு Request அனுப்பபடும். இந்த IP முகவரியை நம்முடைய (Browers) புரவஸ்சர் DNS Server ல் இருந்து வாங்கி அந்த IP Addsress முகவரியை DATA Center க்கு அனுப்பும் அந்த DATA CENTER SERVER ல் இருந்து OPTICAL FIBER CABLE வழியாக Light Pulse வடிவில் இந்த தகவல்கள் பல ஆயிரம் மைல்கள் கடந்து நம் வீட்டில் பயன்படுத்தகூடிய Router ஐ வந்தடைகின்றன. இந்த light Pulse யை நம்முடைய வீட்டில் பயன்படுத்தகூடிய Router Electrical Signal ஆக மாற்றி நம்முடைய Laptop Transfer செய்யபடுகிறது. இதுவே ஒரு மொபைல் போன்க்கு எப்படி Data வருகிறது என்றால் Data Center ல்  இருந்து வரகூடிய Optical Fiber Cable நமக்கு அருகாமையில் உள்ள Cell Phone Tower ல் இனைக்கபட்டு இருக்கும். இந்த (Cell Tower) கோபுரங்கள் வரகூடிய Light Pulse ஐ ( Electromagnetic Waves or EM Waves ) மின்காந்த அலைகளாக நம்முடைய மொபைல் போனை வந்தடைகின்றன. இவ்வாறாக ஒரு நாட்டில் உள்ள Data Server ல் இருந்து நமக்கு வேண்டிய தகவல்கள் விரைவாக நம்முடைய மொபைல் போனுக்கோ அல்லது லேப்டாப் மற்றும் கணினியை வந்தடைகின்றன.


நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்