Lithium-Ion பேட்டரியின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Ticker

6/recent/ticker-posts

Lithium-Ion பேட்டரியின் நன்மைகள் மற்றும் தீமைகள்



நம்முடைய கால சூழுலுக்கு ஏற்ப்ப தொழில்நுட்ப்ப வளர்ச்சியும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றது. அதேபோல் நாம் தற்ப்போது பயன்படுத்தி வருகின்ற பேட்டரியில் அவ்வபோது பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் (Lithium- Ion Battery) லித்தியம் அயன் பேட்டரிகள். இவற்றின் உடைய நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக பார்க்கலாம்.


நன்மைகள்

1) Lead Acid பேட்டரியுடன் ஒப்பீடுகையில் இவை நான்கில் ஒரு பங்கு இடத்தை மட்டுமே பிடிக்கும்

2) Lead Acid பேட்டரியை விட இதன் எடை மிக குறைவானது

3) 2000 முறை இந்த பேட்டரியை ரீசார்ஜ் செய்ய முடியும்

4) மின்சார வாகணங்களில் லித்தியம் பேட்டரியை பயன்படுத்தும் போது மைலேஜ் அதிகபடியாக கிடைக்கின்றது

5) இந்த பேட்டரியை பொறுத்தவரை Lead Acid பேட்டரியை போன்று பராமரிப்பு செலவு என்பது எதுவும் கிடையாது.

6) மேலும் இந்த Lithium Battery யில் BMS Circuit இருப்பதால் முழுவதும் சார்ஜ் ஆன பிறகு தானகவே Auto Cutt off ஆகிவிடும். இதான் over charging ஆவது தடுக்கபடுகிறது.

7) லித்தியம் பேட்டரியில் எப்போதுமே மின்சாரம் ஒரே சீராகவே செல்கின்றது.

8) எடை குறைவாக இருப்பதனால் இந்தவகை பேட்டரியை நம்மால் வேறு இடங்களுக்கு எளிதாக எடுத்து செல்ல முடியும்.

9) மேலும் இந்த பேட்டரியின் Discharge திறன் என்பது குறைவாகவே உள்ளது.இதனால் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்

10) இந்த வகை பேட்டரி தனி தனி செல்களாக கிடைப்பதால் நம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் Voltage மற்றும்  Ah ஐ அதிகபடுத்தியோ அல்லது குறைவாகவோ வடிவமைத்து கொள்ள முடியும்.


தீமைகள் மற்றும் குறைபாடுகள்

1) இந்திய அரசாங்கத்தால் இந்த வகை பேட்டரிகள் இன்னும் வாகணங்களில் பயன்படுத்த அனுமதி கிடையாது.

2) இவைகளின் விலை என்பது சற்று அதிகமாகவே இருக்கின்றது

3) இந்த வகை பேட்டரிகள் எளிதில் வெடிக்ககூடிய தன்மை பெற்றவை.

4) இந்த பேட்டரிகளில் தன்னீர் புகாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். இல்லை என்றால் வெடிக்கும் அபாயம் உள்ளது.

5)இவைகள் எளிதாக வெப்பமாகும் தன்மை பெற்றவை.

6)BMS Circuit இல்லாமல் இவற்றை பயன்படுத்தகூடாது.


நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்