Inverter பயன்படுத்தும் போது கவணிக்க வேண்டியவை

Ticker

6/recent/ticker-posts

Inverter பயன்படுத்தும் போது கவணிக்க வேண்டியவை

இன்வெர்ட்டர் (Inverter) பயன்படுத்தும் போது கவணிக்க வேண்டியவை 

 தற்ப்போது பெரும்பாலான வீடுகளில் இன்வெர்ட்டர் பயன்படுத்த கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் கோடைகாலங்கள் மற்றும் மழை காலங்களில் மின் தட்டுபாடு என்பது அதிக அளவில் உள்ளது, எனவே இந்ந மின் தட்டுபாட்டை சமாளிக்கும் விதமாக வீடுகள், கடைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் இன்வெர்ட்டர் பயன்படுத்தபட்டு வருகின்றன. 


மின்சாரம் தடைபடும் போது இந்த இன்வெர்ட்டர் மூலமாக நம்முடை வீட்டில் உள்ள மின் சாதனங்கள் இயங்குகின்றன. மீன்டும் மின்சாரம் வந்த பிறகு இந்த இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆகும்.


மேலும் இந்த இன்வெட்டர்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.இல்லையென்றால் இவைகள் எளிதாக பழுதாகிவிட வாய்ப்புள்ளது. எனவே இதில் கவனிக்க வேண்டியவை என்னவென்று கீழ்வரும் பதிவில் பார்க்கலாம்.



1) இன்வெர்ட்டர் எப்போதும் வீட்டின் உள்ள உயரமான இடங்களில் வைக்கபட வேண்டும். அப்போதுதான் காற்றோட்டத்தில் அதன் Inverter ல் உள்ள வெப்ப காற்று வெளியேறும். மேலும் குழைந்தகளுக்கு எட்டாத இடத்தில் இருக்க வேண்டும். மேலும் இவைகள் நீர் படாத இடத்தில் இருக்க வேண்டும்.


2) Inverter பொறுத்தவரை மேலுகேஸ், நெருப்பு, மெழுகுவர்த்தி, மண்ணென்ணெய் போன்ற தீ பற்ற கூடிய இடங்களில் வைக்ககூடாது.


3) மேலும் இன்வெர்ட்டர்களை Bedroom ல் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனேன்றால் இதில் இருந்து வெளிபடகூடிய வாய்வு மயக்கத்தை ஏற்படுத்தகூடும்.இதனால் தனி அறையில் வைப்பதே சிறந்தது.


4) இன்வெர்ட்டர் சார்ஜ் ஆகும் போதும் அதன் சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்க கூடாது. எப்படி செய்தால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து சீக்கிரம் பழுதாகிவிடும்.


5) வெளி ஊர்களுக்கு நீண்ட நாட்கள் தங்கும் பட்சத்தில் உங்கள் இன்வெர்ட்டரை ( INVETTER )அனைத்து வைத்துவிட்டு செல்லவது நல்லது.


6) இன்வெர்ட்டரை பயன்படுத்தும் போது அதன் மேல் தூசி, குப்பைகள் படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் அட்டை பெட்டிகளை வைத்து மூடுவது மிக பெரிய தவறு.


7) இன்வெர்ட்டர்களை தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் போது பேட்டரியில் Distilled water சரியாக உள்ளதா அடிக்கடி சரி பார்த்துகொள்ள வேண்டும்.


8) இன்வெட்டரில் இருந்த பேட்டரியை கழற்றும் போது Main Switch மற்றும் Inverter ஐ Off செய்யதுவிட்டு பேட்டரியை கழற்ற வேண்டும்.


9) இன்வெட்டர்களில் பேட்டரி Tublar Battery மற்றும் Flat battery போன்றவை பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்த பேட்டரியின் வகைக்கு ஏற்ப்ப இன்வெர்ட்டரில் option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.


10) இன்வெட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போதும் வருடத்திற்க்கு ஒரு முறையாவது இன்வெட்டரில் இருந்து பேட்டரியின் இனைப்பை சிறிது நேரம் துண்டிப்பது நல்லது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்