Aircooler பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் ?

Ticker

6/recent/ticker-posts

Aircooler பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் ?

AIR COOLER

கோடைகாலம் வந்துவிட்டாலே வெய்யிலின் கொடுமை தாங்க முடியாமல் இருக்கின்றது. இதை சமாளிக்க நாம் ஏசி வாங்கலாமா அல்லது ஏர்கூலர் வாங்கலாமா என்ற குழப்பமான மனநிலையில் இருப்போம். இது ஒரு புறம் இருக்க நடுத்தற மக்கள் அனைவருமே  ஏர்கூலரை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் Ac யின் விலை என்பது அதிகமாகவே உள்ளது. எனவே நடுதர குடும்பத்தினர் Aircooler ஐ வாங்குகின்றனர். 


ஆனால் இதன் பாதிப்புகள் என்னவென்று பல நபர்களுக்கு தெரிவது இல்லை. உதாரனமாக சொல்ல போனால் மழை பெய்யும் போது காற்று எப்படி ஈரதன்மை பெற்று குளிர் காற்றாக நமக்கு கிடைக்கிறது. இதே வேலைதான் ஏர்கூலரில் நடைபெறுகிறது. சரி இதன் பாதிப்புகள் என்வென்று கீழே பார்க்கலாம்.

ஏர்கூலரின் பாதிப்புகள் : 

1) ஏர்கூலரில் குளிர்ந்த நீர் பயன்படுத்துகிறோம் . இந்த நீரின் மூலமாக கிருமிகள் காற்றில் கலந்து நமது சுவாச பாதை வழியாக எளிதில் சென்றுவிடுகிறது. இதன் மூலம் வைரஸ் தொற்று பாதிப்பு நமக்கு ஏற்படுகின்றது.

2) ஏர்கூலரை பயன்படுத்தும் போது ரூம் முழுவதும் காற்றில் ஈரபதத்தை அதிகபடுத்திவிடும். 

3) கடலோர பகுதிகளில் ஏர்கூலர் பயன்படுத்தகூடாது. 

4) Air cooler பயன்படுத்தும் போது நுரையீரலில் (Fungs infection) காளான் தொற்று ஏற்படுகிறது

5) ஏர்கூலர் மூலம் நமது உடலில் சுவாச பிரச்சனைகள், மற்றும் தீவிர சளி பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

6)தொடர்ச்சியாக ஏர்கூலரை பயன்படுத்தும் போது நமக்கு சைனஸ் பிரச்சனையை வரகூடும்

7) ஏர்கூலரில் இருக்ககூடிய நீரில் கொசுக்கள் முட்டை இட்டு டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்படுத்தும்.

8) Air cooler ல் பழைய நீரினை தொடர்ந்து  பயன்படுத்த கூடாது. ஒவ்வொரு நாளும் புதிய நீர் மாற்றுதல் வேண்டும்

9) தன்னீரில் வைரஸ் போன்ற கிருமிகள் இருந்தால்  எளிதாக காற்றின் மூலமாக  பரவும்.

10) Air cooler எப்போதும் அதிகபடியான சத்தத்தை ஏற்படுத்தும்.

11) Aircooler மூலமாக ரூமில் உள்ள  வெப்பம் குறைய பல மனி நேரம் ஆகும்.

12) இவற்றை பயன்படுத்தும் போது காற்றின் மூலமாக அதிகபடியான தூசுகள் வர வாய்ப்புகள் மிக அதிம்.

13) மேலும் பூச்சுள் மற்றும் பல்லிகள் தன்னீரில் விழுந்து இறந்து கிடக்கும். அந்த துர்நாற்ற காற்றை நாம்  சுவாசிக்ககூடும். மேலும் அவை ஏர்கூலரினுல் (Aircooler) இறந்து கிடப்பதுகூட நமக்கு தெரியாது.

எனவே முற்றிலும் Air cooler ஐ தவிர்ப்பது நம் உடல் நலத்திற்க்கு பாதுகாப்பனது.

நன்றி!


கருத்துரையிடுக

0 கருத்துகள்