வாட்டர் ஹீட்டரை இப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Ticker

6/recent/ticker-posts

வாட்டர் ஹீட்டரை இப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Water Heater

  பொதுவாக நாம் இப்போது அனைத்து வீடுகளிலும் Water Heater பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இவற்றை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது தெரியாமல் இருக்கின்றனர். வாட்டர் ஹீட்டர் வாங்கிவிட்டால்  மட்டும் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்தும் முறை  என்பது தவறாகவே உள்ளது. வாட்டர் ஹீட்டர் மூலம் பலர் உயிர் இழந்து இருக்கின்றனர். இதற்க்கு கவன குறைவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். சரி இந்த பதிவில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் முறை மற்றும் இதில் நாம் செய்யகூடாதவை என்ன என்று பார்க்கலாம்.

1) வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் போது எப்போதும் ஸ்டீல் அல்லது சில்வர் பாத்திரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பக்கேட் போன்றவற்றில் பயன்படுத்த கூடாது.




2) water Heater ஐ பயன்படுத்தும் போது தன்னீரின் அளவு Minimum மற்றும் Maximum அளவு சரியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் வாட்டர் ஹீட்டர் சூடாகி வெடித்துவிடும்

3) ஹீட்டர் பயன்படுத்தும் போது தன்னீரின் அளவு  Maximum குறியீட்டில் இருக்க வேண்டும்

4) Water Heater ஐ பயன்படுத்தும் நேரத்தில் தன்னீர் சூடாகிவிட்டதா என்று கை வைத்து தொட்டு பார்ப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். ஏனேன்றால் அதிகமான விலை கொடுத்து தரமான வாட்டர் ஹீட்டர்களில் மின்சார கசிவு என்பது இருக்காது. விலை குறைந்த மலிவான தரம் இல்லாத எந்த வித Warranty யும்  இல்லாமல் கிடைக்ககூடிய water Heater எப்போதுமே ஆபத்தானவை. எனவே கைகளை வைப்பதை தவிர்க்கவும்.

5) வாட்டர் ஹீட்டர் பிளக்கில் சொருகி  Switch  ON ல் இருக்கும் போது மேலும்  தன்னீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மின்சாரம் நீங்கள் பயன்படுத்தும் பாத்திரத்தின் மூலம்  கைகளின் மூலமாக உடம்பில் பாயும் அபாயம் உள்ளது.




6) வாட்டர் ஹீட்டர் ஐ பயன்படுத்தும் போது Three 3 pin Plug Socket ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் 

7) Heater பயன்படுத்தும் முன், நாம் பயன்படுத்தும் 3 pin plug ல் எர்த் wire சரியாக இனைக்கபட்டு இருக்கா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும்

8) பாத்ரூமில் வைத்து வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால் வாட்டர் ஹீட்டரில் ஏதாவது மின்சார கசிவு ஏற்படுமானால் அது Bathroom ன் தரையின் உள்ள ஈரதன்மை மூலம் மின்சாரம் நம்மை தாக்கும் இது உங்கள் உயிரை பறித்துவிடும்.

9) தன்னரீல் பயன்படுத்தாமல் வாட்டர் சூடாகிரதா என்று  ஹீட்டரை Plug ல் சொருகி ON செய்து பார்க்ககூடாது. இதன் மூலம் வெடிக்கும் அபாயம் உள்ளது.




10) வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய பிறகு உடனே தன்னீரில் இருந்து எடுத்துவிட கூடாது. இதனால் வாட்டர் ஹீட்டர் சீக்கிரமாக பழுதாகிவிடும். எனவே switch off செய்த பிறகு ஒரு நிமிடத்திற்கு பிறகு ஹீட்டரை வெளியில் எடுக்க வேண்டும்.

11) அளவுக்கு அதிகமான நேரம் ஹீட்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் தன்னீர் நன்றாக கொதித்த உடன் off செய்வது நல்லது. இல்லை என்றால் தன்னீரின் கொதி நிலை அதிகமாகி தன்னீர் அளவுகுறைந்து Minimum level க்கு கீழ் சென்று விடும். இதனால் ஹீட்டர் அதிகபடியான சூடாகி அதன் பிளாஸ்டிக் உருகி தீ பற்ற கூடும்.

12) water Heater தறையில் வேகமாக கீழே போடுவதால். அதன் சூடாகும் தன்மை குறைந்து போகும். 

13) Heater ன் மேற்புறம் மின்சாரம் வருகிறதா என்று Tester வைத்து சரிபார்த்து கொள்வது நல்லது.

மேலே குறிப்பிடபட்டுள்ள செய்திகளை கடைபிடித்தாலே போதுமானது. 

நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்