அல்சர் பிரச்சனை எதனால் வருகிறது ? ஒரு அலசல்

Ticker

6/recent/ticker-posts

அல்சர் பிரச்சனை எதனால் வருகிறது ? ஒரு அலசல்

 


gastric problem symptoms

( Ulcers Problem )அல்சர் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் மாறிவரகூடிய நமது கலாச்சாரம் மற்றும் நமதுஉணவுமுறைகளும் தான். சாப்பிடாமல் இருந்து அல்சர் வந்த காலங்கள் போய் அளவுக்கு அதிகமான உணவுகளை எடுத்துகொள்வதும் அல்சரை ஏற்படுத்துகின்றன.  ( gastric problem )அல்சர் பிரச்சனை ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.



1) அல்சர் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நமது குடலில் சுரக்ககூடிய ஹைட்ரோகுளோரிக் அமிலம் ( hydrochloric acid )அளவுக்கு அதிகமா சுரப்பதே காரணமாக அமைகின்றன. 

2) இந்த அமிலம் பொதுவாக காலை மதியம் இரவு என்று நாம் சாப்பிடுவதற்கு முன் இவைகள் சுரக்கின்றன. அந்த நேரங்களில் நேரம் தவறாமல் சாப்பிடுவதன் மூலம்( hydrochloric acid uses )இந்த அமிலம் நமது குடற்சுவர்களை பாதிக்காமல் நாம் சாப்பிடும் உணவை செறிக்க வைக்கிறது.இந்த அமிலம் சுரக்கவில்லை என்றால் நாம் சாப்பிடும் சாப்பாடு ஜீரனிக்காது.

3) அல்சர் என்பது நமது வயிற்றில் ஏற்படகூடிய புண். இந்த புண்கள் நாம் சாப்பிடும் காரவகை உணவுகள் மூலமும் ஏற்படுகின்றன. 

4) அதிகபடியான காரம், மசால கலந்த உணவு பொருட்களை நாம் சாப்பிடும் போது  நமது குடலில் சுரக்ககூடிய அமிலத்தை அதிகபடியாக சுரக்க செய்து புண்களை ஏற்படுத்துகின்றன.



5) காலை சாப்பாட்டை தவிர்ப்பது அல்லது மதிய உணவை தவிர்ப்பது இதன் மூலம் அமிலம் அதிமாகி வெறும் வயிற்றில் உள்ள குடல் சுவர்களை இந்த அமிலம் அரித்துவிடும். இதன் மூலமாக புண்களை ஏற்படுகின்றன.

6) மேலும் சோடா, 7up, pepsi, cocacola, போன்ற பாட்டிலில் அடைக்கபட்டி இருக்கும் கேஸ் Gas மிகுந்த பாணங்களை அடிக்கடி குடிப்பதனால் இதில் உள்ள வேதி பொருட்கள் நமது இறைப்பையில் பாதிப்பை ஏற்படுத்தி இவை அல்சரை ஏற்படுத்துகின்றன.

7) அதிகபடியான மாத்திரைகள் உட்கொள்வதும். இவை அமில தன்மையை அதிகபடுத்துகின்றன. இதன் மூலமாக புண்கள் ஏற்படுகின்ற. பொதுவாக paracetamol மாத்திரைகள் அதிகபடியாக எடுக்ககூடாது.

8) போதுவாக paracetamol மாத்திரைகள் சாப்பிடும் போது ஆகரத்துக்கு முன் கொடுக்ககூடிய மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் தான் நமது குடலில் சுரக்ககூடிய அமிலத்தை கட்டுபடுத்துகின்றன.

9) நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் புளி அதிகமாக சேர்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனேன்றால் புளி அமிலம் சுரப்பதை அதிகபடியாக தூண்டிவிட்டும். இதானால் சாப்பிட்ட பிறகு எறுகலித்து வரும், ஆதாவது தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். இதற்க்கு காரணம் நமது குடலில் சுரக்ககூடிய அமிலம் அதிகமாக சுரப்பதே காரணம். 



10) அதேபோல் அல்சர் பிரச்சனை இருப்போர் ஊறுக்காய் சாப்பிடவே கூடாது. இது பெரிய பிரசாசனையை ஏற்படுத்தும், அதேபோல் லெமன் ஜூஸ் குடிக்ககூடாது, லெமன் சாப்பாடு சாப்பிடகூடாது. மேலும் காரசட்னி, பச்சமிளாகய் கலந்த உணவு, இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

11) மேலும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி கலந்த மசாலா பொருட்களை சாப்பிடகூடாது.

12) ( non veg ) பிரியானி போன்ற உணவுகளை அல்சர் இருக்கும் பச்சத்தில் தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் அல்சர் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். 

13) தொடர்ச்சியாக கார உணவுகளை சாப்பிடும் போது நமது குடலின் அமில சுரப்பிகள் அதிகமாக சுரந்து தொண்டைக்கு மேல் எறுகலித்து வரும்.இவை அடிக்கடி வரும் போது ( gastritis )அல்சர் பிரச்சனை வர போவதற்கான முன் எச்சரிக்கை என்றுகூட சொல்லலாம் ( gastric problem symptoms )

14) அதிக படியான ஏப்பம் வருவது நமது குடலில் அதிகபடியான அமிலத்தினால் ஏற்படுகிறது. இவற்றை ஆரம்பத்தில் சரி செய்யவில்லை என்றால் இவை அல்சர் பிரச்சனையில் விடும்.

15) அதிக படியான ஆன்டிபயாடிக்  மாத்திரைகளை (antibiotic tablets )எடுப்பது குடல் புன் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. 

16) கடையில் விற்கபடும் வடை, சமோசா, பப்ஸ், பஜ்ஜி போன்றவற்றில் சோடாப்பு கலக்கபடுகின்றன. இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது அல்சர் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. 

17) இரவு நேரத்தில் சரியான தூக்க இன்மையும் அல்சர் ஏற்பட துனையாக அமைகின்றன.

18) அதிகபடியான கோபம், மன அழுத்தம் ஏற்படும் போது இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகமா உருவாகின்றன. 

19) தற்ப்போது உள்ள நிலையில் ஹோட்டல் உணவுகளை அதிக அளவில் எடுப்பவர்களே இந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

20) பச்சை வெங்காயம் அதிக அளவில் சேர்ப்பது அமிலத்தை அதிக அளவில் தூண்டிவிடும்.எனவே முடிந்தவரை வெங்காயத்தினை வதக்கி பயன்படுத்துவது நல்லது.



21) குடிபழக்கமும் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனென்றால் அதில் உள்ள ஆல்கஹால் குரோனிக் எனும் குடல் அழற்சியை ஏற்படுத்திவிடும்.

22) இந்த அல்சர் பிரச்சனை யால் வயிற்றில் அதிகபடியான வாயு ( gas in stomach ) பிரச்சனையை ஏற்படுத்திவிடும்

23) பால்பொருட்கள் அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக milk products ஒரு வித புளித்த ஏப்பத்தை ஏற்படுத்தி விடும். இது மேலும் அல்சர் பிரச்சனையை அதிக படுத்திவிடும்

இந்த பதிவின் மூலமாக அல்சர் ஏற்படுவதற்க்கான  காரணங்கள் என்ன என்பதனை விரிவாக பார்த்தோம். அடுத்த பதிவில் இந்த அல்சரை எப்படி எளிதாக சரியாக்க முடியும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்