புதிய Tv வாங்குவதற்க்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது !

Ticker

6/recent/ticker-posts

புதிய Tv வாங்குவதற்க்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது !


இன்று நாம் அன்றாடும் வாழ்வில் தினந்தோறும் பயன்படுத்தகூடிய  பொழுதுபோக்கு சாதனமாக Tv அமைந்துள்ளது. ஆனால் அவ்வப்போது பல்வேறு  மாற்றங்கள் இந்த Tv யில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சாதாரன Block & White டிவியில் ஆரம்பித்து தற்ப்போது ( internet )இனையதளம் வரை அதில் பார்க்ககூடிய அளவிற்க்கு தொழில்நுட்ப்ப மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. எனவே கால மாற்றத்திற்க்கு ஏற்றார் போல் டிவியும் வாங்க விரும்புகிறோம்.ஆனால் Tv வாங்கும் முன் அதில் சிலவற்றை கவனிக்க வேண்டும். அவைகள் என்ன என்பதை கீழ் வரும் பதிவில் பார்க்கலாம்.


1) முதலில் நீங்கள் Tv வாங்கும் முன் எந்த விலையில் வாங்கவேண்டும் என்பதை பட்ஜட் போட்டுகொள்ளுங்கள். தற்ப்போது ஆன்லைனில் Tv விலைகளை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதன் படி ஒரு குறிப்பிட்ட விலையை தீர்மானியுங்கள்.

2) அடுத்து எந்த அளவிலான Display Size உங்கள் வீட்டுக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். Display size  முடிவு செய்ய உங்கள் வீட்டில் Tv வைக்ககூடிய இடத்திற்க்கும் நீங்கள் அமர்ந்து பார்க்ககூடிய தூரம் இதையெல்லாம் வச்சு தான் நீங்கள் முடிவு செய்யவேண்டும். சிறிய அளவிலான Room ல்  பெரிய அளவிலான Tv வைத்தால் உங்கள் பார்வை குறைபாடு வரும். மேலும் படம் தெளிவாக தெரியாது.





3) இப்போது வரகூடிய Tv அனைத்தும் Smart tv ஆக மாறிவிட்டது. எனவே நீங்கள் வாங்க கூடிய டிவி Smart Tv அல்லது Android Tv யாக மட்டுமே இருக்க வேண்டும்.

Smart Tv அல்லது ஆன்டராய்டு Tv வாங்கும் முன் நாம் இதை கண்டிப்பாக தெரிந்து வாங்க வேண்டும்.

4) நீங்கள் வாங்ககூடிய Tv யில் Hdmi Port இரண்டு, Usb Port 2, Hdmi ARC support இருக்க வேண்டும்.இரண்டுக்கும் மேல் இருந்தால் சிறப்பு

5) Digital Audio Optical Output இருக்க வேண்டும்

6) Coaxial Output இருந்தால் மேலும் நல்லது. ஆனால் கட்டாயம் இல்லை

7) LAN கண்டிப்பாக இருக்க வேண்டும்

8) அதே போல் VGA port இருக்க வேண்டும்.

9)  Av Socket இருக்க வேண்டும். ஏனென்றால் பழைய மாடல் Dvd  Player இனைக்க உதவியாக இருக்கும்.

10) மேலும் நீங்கள் வாங்ககூடிய Tv Remote ல் Smart Remote ஆக இருக்க வேண்டும். Bluetooth Support & Voice commend Support செய்வதாக இருக்க வேண்டும்.

11) மேலும் உங்கள் Tv யில் Mic support இருந்தால் நல்லது. இது கட்டாயம் இருக்க வேண்டும் என்பது கிடையாது.

12)  32" Inch  Tv யாக இருந்தால்  FHD யாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.

13) 43"  Inch க்கு மேல் வாங்ககூடிய Tv யாக இருந்தால் 4k Support இருக்கானு பார்த்து வாங்க வேண்டும்.

14) Android Tv வாங்கினால் அதன் Ram 2GB, மற்றும் Rom memory 8GB கன்டிப்பாக இருக்க வேண்டும்.

15) Dolby Audio support இருக்க வேண்டும்.

16) கடைசியாக நல்ல பிராண்ட் பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவாக உள்ளது என்ற தரமற்ற கம்பெணி பிராண்டை வாங்கினால் உங்கள் பணம் அபேல் தான். எனவே நாம் வாங்ககூடிய டிவி  குறைந்தது பத்து வருடங்கள் வரை உழைக்க வேண்டும். ஏனென்றால் டிவியை வருடம் வருடம் மாற்ற போவது இல்லை, மேலும் டிவியின் விலையும் அதிகமாக உள்ளது. எனவே வாங்கினால் தரமான Tv ஐ வாங்குவதே சிறந்தது.

நன்றி


கருத்துரையிடுக

0 கருத்துகள்