Term insurance கட்டாயம் எடுக்க வேண்டுமா ? அதன் முக்கியதுவம் என்ன

Ticker

6/recent/ticker-posts

Term insurance கட்டாயம் எடுக்க வேண்டுமா ? அதன் முக்கியதுவம் என்ன

www.tamilantech.com

TERM INSURANCE என்றால் என்ன ?

    Term insurance என்பது நீங்கள் இல்லாத சூழலில் உங்களது குடும்பத்திற்க்கு நிதி பாதுகாப்பு வழங்கும் ஒரு திட்டமாகும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்ட கூடிய நபர் அல்லது அவர் குடும்ப தலைவராக இருக்கலாம். எதிர்பாரத விதமாக  அவர் இறந்து விட்டால் இந்த Term insurance மூலமாக அவர்களது குடும்பம் Financial ஆக பாதுகாக்க படும். இதன் மூலம் அவரது குடும்பம் நொடிப்பு நிலையில் இருந்து பாதுகாக்கபடும். எனவே, இதற்க்காக உருவாக்க பட்டது தான் டேம் இன்சூரன்ஸ்.

Term Insurance விதிமுறைகள் என்ன

    Term insurance பாலிசி எடுத்தவர் பாலிசி காலம் முடிவடையும் வரை அவர் உயிரோடு இருந்தால் அவர் கட்டிய பிரிமியம் தொகை எதுவும் கிடைக்காது. ஏனென்றால் அவருடைய life cover ஆக செலுத்திய பிரிமியம் தொகை என்பதால் அவருக்கோ அவரை சார்ந்தவருக்கோ அந்த தொகை திருப்பி தரபடாது. ( Term insurance with return of premium )

மேலும்  Money back policy யில் கட்டும் பிரிமியத்தில் 5ல் ஒரு மடங்கு மட்டுமே நீங்கள் Term insurance க்கு செலுத்தும்  பிரிமியம் தொகை ஆகும். 


www.tamilantech.com


Term insurance benefits

உதாரணமாக , நீங்கள் Money Back policy யில் 50 லட்சத்திற்க்கு ஒரு பாலிசி போட்டால் வருடத்திற்க்கு ரூபாய் 25,000 பிரிமியம் தொகை செலுத்துவது போல் இருக்கும். மேலும் அவை 25 வருடத்திற்க்கு செலுத்துவது போல் இருக்கும்.

ஆனால் டேம் இன்சூரன்ஸ் திட்டத்தில் 50,00,000 பாலிசிக்கு வெரும் 395 ரூபாய் மாத மாதம் செலுத்தினால் போதும். அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்க்கு ஒரு முறை ( insurance premium  )பிரிமியம் தொகை செலுத்தினால் போதுமானது. மேலும் இதில் குறைந்த செலவில் அதிபடியான காப்பீட்டை நீங்கள் பெற முடியும். மேலும் இவை நடுத்தர குடும்பத்திற்க்கு ஏற்ற திட்டமாகும். இந்த திட்டம் என்பது ஒவ்வொரு நபரும் தனது குடும்பத்தை பாதுகாக்கும் திட்டமாக கருத வேண்டும். முதலீடு செய்யும் திட்டமாக அல்லது சேமிப்பு திட்டமாக பார்க்ககூடாது. இவை முழுக்க முழுக்க Life policy ஆகும்.


www.tamilantech.com


Term insurance amount

    இந்த insurance policy ஐ நாம் எடுக்கும் போது நாம் கேட்க்ககூடிய காப்பிட்டு தொகை உடனே கிடைத்துவிடாது. ஏனென்றால் Term insurance எடுக்கும் போது உங்களின் முழு விவரங்களின் உன்மை தன்மை அவர்களுக்கு தெரிய வேண்டும். அதாவது நீங்கள் செய்யும் வேலை, உங்கள் வயது, உங்களின் வருமானம், உங்கள் வேலையில் உள்ள Risk, ஆண்டு வருமானம், உங்களின் உடல் நிலை, அனைத்தும் ஆராய பட்ட பிறகு அதன் பின்னரே உங்களுக்கான Insurance Amount நிர்னயக்க படும். 

மேலும் உங்களுக்கு எடுக்கபடும் Health check up அனைத்திற்கும் அந்த Insurance company அதற்க்கான தொகையை செலுத்திவிடும். நீங்கள் புகை பிடிப்பவராக அல்லது குடிபழக்கம் உள்ளவராக இருந்தால் உங்களின் உடல் நலனை பொருத்து உங்களுக்கான பிரிமியம் தொகை அதிகமாக வாய்ப்புகள் உண்டு.


Term insurance plan

ஒரு தனி நபர் எவ்வளவு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்

உதாரணமாக,‌‌ஒருவர் மாதம் 30000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று வைத்துகொள்வோம்.

ஒரு வருடம் வாங்கும் சம்பள தொகை 30,000 × 12 = 3,60,000


15வருடங்களுக்கு அவர் சம்பள தொகை 15 × 3,60,000= 54,00,000 லட்சம்.


அவர் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் கவர் ரூபாய் - 54,00,000 லட்சம்.


54 லட்சத்திற்கு எவ்வளவு பிரிமியம் தொகை செலுத்த வேண்டும் என்பதை கீழ்வரும் பதிவில் பார்க்கலாம்.


▫️உதாரனத்திற்க்கு , 28 வயது உடைய நபர் 50  லட்சத்திற்கு பாலிசி எடுக்கிறார் என்று வைத்துகொள்வோம்.


▫️மேலும் அவர் 60 வயது வரை பாலிசி எடுக்கிறார்.


▫️அவர் மாதம் கட்டவேண்டிய பிரிமியம் தொகை ரூபாய் 395


▫️ஒரு வருடத்திற்க்கு கட்டவேண்டிய பிரிமியம் தொகை 395 × 12 = 4740


▫️மொத்தம் அவர் 60 வயது வரை கட்டகூடிய பிரிமியம் தொகை 1,51,680 ரூபாய் மட்டுமே

எனவே 54 லட்ச ரூபாய்க்கு நீங்கள் கட்ட வேண்டிய மொத்த தொகை 1.5லட்சம் மட்டுமே.


www.tamilantech.com


மேலும் பாலிசிதாரர் இறந்து விட்டால் அதற்க்கான முழுதொகையும் அவரது குடும்பதினருக்கு கொடுக்கபடும். இதன் மூலமாக அவரது குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்க படுவார்கள்.

மேலும் நீஙாகள் Term insurance எடுப்பதற்க்கு Online மூலமாகவும் எடுக்கலாம். உதாரனமாக நீங்கள் உங்களுக்கான பாலிசி தொகை எவ்வளவு அதற்க்கான பிரிமியம் தொகை மாதம் மாதம் எவ்வளவு கட்ட வேண்டும் போன்றவற்றை Policy Bazaar என்ற இனைய தளத்திற்க்கு சென்று term insurance Calculator செய்து கொள்ளலாம்.

நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்