Moto G32 போன் மிக குறைவான விலையில் அனைத்து வசதிகளுடன் அறிமுகபடுத்தபட்டது

Ticker

6/recent/ticker-posts

Moto G32 போன் மிக குறைவான விலையில் அனைத்து வசதிகளுடன் அறிமுகபடுத்தபட்டது

 Motorola G32


Moto G32 Price



( Motorola )மோட்டோ ஜி32 போன் ஒரு பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகபடுத்தபட்டுள்ளது. மேலும் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குவதற்க்கு  முன் நாம் அதில் கேமரா, பேட்டரி, டிஸ்ப்ளே, ரேம், ஸ்டோரேஜ் அளவு இவை அனைத்தும் நாம் எதிர் பார்க்கும் அளவுக்கு இருந்தால் மட்டுமே நாம் அந்த போனை வாங்குவோம். எனவே அதே போல் ஒரு  ஸுமார்ட் போனை,  அனைத்து வசதிகளையும் எதிர்பார்க்க கூடிய இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல ஸுமார்ட் போன் ஆக இந்த Moto G32 இருக்ககூடும். மேலும் இந்த போனை பற்றிய விரிவான தகவல்களை கீழ்வரும் பதிவுகளில் கானலாம்.


டிஸ்ப்ளே அமைப்பு :


Moto G32 Display



இந்த மோட்டோ ஜி32 போனில் IPS எல்சீடி டிஸ்ப்ளே பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அளவு 16.51cm , 6.5இன்ச் புள் எச்டி பிளஸ் கொடுக்கபட்டுள்ளது. இதில் கிரிஸ்டல் கிளியர், டிஸ்ப்ளேவில் இனைக்கபட்டுள்ளது. இதில் 90Hz ரெஃப்ரெஷிங் ரேட் கொடுத்துள்ளனர். இதன் ரெசலுஷன் 2400×1080 பிக்சல்ஸ் ஆகும்

இதன் பிராசஸர் :


Moto G32 snapdragon


இதில் ஸ்னாப்டிராகன் 680  ஆக்டகோர் பிராசஸர் கொடுக்கபட்டுள்ளது. இதன் மூலம் இந்த போனில் வாடிக்கையாளர் ஒரு நல்ல எஸ்பீரியன்ஸ் எதிர்பார்க்கலாம், இதன் வேகம், மற்றும் தங்கு தடையற்ற இனையதள சேவையை பயன்படுத்த முடியும். மேலும் இந்த போனில் அதிகம் வெப்பம் அடைதல் இருக்காது. இதில் நவீன புகைபட கருவிகள் , மற்றும் வீடியோ ஸ்டீரிமிங் வசதி மேம்படுத்தபட்டுள்ளது.

இதன் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் :


இந்த போன் எளிதாக இயக்கும் பொருட்டு ஆன்ட்ராய்டு 12 Os கொடுக்கபட்டுள்ளது. மேலும் இதனை மேம்படுத்தும் விதமாக இதில் ஆண்ட்ராய்டு 13ஐ  அப்டேட் செய்யும் வசதியும் கொடுக்கபட்டுள்ளது. மேலும் இதில் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்பேட் வசதியும் உள்ளது.


திங்ஷூல்டு பாதுகாப்பு வசதி :

இதில் பாதுகாப்பு வசதி மற்ற போன்களை விட சற்று அதிகமாக மேம்படுத்தபட்டுள்ளது. இதன் மூலமாக உங்கள் டேட்டாக்கள் திருடு போவதை தடுக்க முடியும். மேலும் மால்வேர், கேக்கர்ஸ், வைரஸ், ஹார்டுவேர் பாதுகாப்பு வசதிகள் கொடுக்கபட்டுள்ளன. 


IP52 பாதுகாப்புவசதிகள்:


Moto G32 IP52


இந்த போனில் IP52 பாதுகப்பு வசதிகள் உள்ளன. இந்த போன் தூசியில் இருந்த பாதுகாக்கபடுகின்றன. மேலும் 

பின்பக்க கேமராவில் செங்குத்தாக 15° நீர் தெளிப்பில் இருந்தும் இந்த போன் பாதுகாப்பாக இருக்கும்.

பின்பக்க கேமரா : 


Moto G32 camera


இதில் மூன்று கேமராக்கள் பயன்படுத்த பட்டுள்ளன. பிரைமரி கேமரா 50எம்பி, f/1.8, wide இதில் Quad பிக்சல்ஸ் டெக்னாலஜ் பயன்படுத்தபட்டுள்ளது.  இரண்டாவது கேமரா ultra wide - 8MP, f/2.2   118° ல் உங்களால் போட்டக்களை எடுக்க முடியும். மூன்றாவது கேமரா 2MP ( மேக்ரோ/ டெப்த் சென்ஸார்) இதில் எல்இடி ஃபிளாஷ் வசதியும் உள்ளது. இதில் வீடியோக்கள் 1080P@30fps ல் எடுக்க முடியும்.

செல்ஃபீ கேமரா : 

இந்த Moto G32ல் செல்பீ கேமரா 16MP, f/2.4 wide கொடுக்கபட்டுள்ளது. மேலும் வீடியோ 1080@30fps  ல் எடுக்க முடியும்.

COMMS :

இந்த போனில் Wi-Fi Direct வசதி கொடுக்கபட்டுள்ளது. இதில் wifi Dual bond வசதியும் உள்ளது. மற்றும் புளூடூத் 5.2 ஆக உள்ளது. இதில் ஜீபிஸ் GLONASS, GALILEO இனைக்கபட்டுள்ளது. இந்த விலையில் இந்த போனில் NFC சப்போர்ட் உள்ளது குறிப்பிடதக்கது. இதில் USB type c 2.0 உள்ளது.


சென்ஸார் வசதிகள்:

இதில் Fingerprint சென்ஸார் போனின் ஆன்/ஆஃப் சுவிட்ச்யில் கொடுக்கபட்டுள்ளது. இந்த Fingerprint sensor துள்ளியமான வேகத்தில் செயல்படுகிறது. மேலும் இந்த போனில் Accelerometer, Compass, gyro sensor, Proximity sensor வசதியும் உள்ளது.

இதன் ஸ்டோரேஜ் அளவு :

இந்த போனில் 4GB ரேம் / 64GB இன்டேனல் மெமரி அளவு கொடுக்கபட்டுள்ளது. இதில் மேலும் மெமரி அளவை மேம்படுத்தும் விதமாக 1TB வரை மெமரி கார்டு இனைத்துகொள்ளும் வசதியும் உள்ளது. 

பேட்டரி :

இதில் போனின் பிராசஸர் போன்றவற்றை கவனத்தில் கொண்டு இதில் பேட்டரி 5000mAh ஆக கொடுக்கபட்டுள்ளது. இதில் 33w அதிவேக டர்போ பவர் சார்ஜர் வசதியும் இதில் உட்படுத்தபட்டுள்ளது.

கலர்மாடல்கள் : 

சாட்டின் சில்வர், மினரல் கிரே


இதன் விலை :

Rs 12,999

Moto G32 ஆகஸ்ட் மாதம் 16 தேதி முதல் விற்பனை தொடங்கும் என்றும். இந்த போன் 16ம் தேதியில் இருந்து ஆன்லைனில் Flipkart -ல் விற்பனை துவங்கும் என அறிப்பு வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்