குறைவான விலையில் அறிமுகம் செய்யபடுகிறது ரியல்மீ சி33 மொபைல் போன்

Ticker

6/recent/ticker-posts

குறைவான விலையில் அறிமுகம் செய்யபடுகிறது ரியல்மீ சி33 மொபைல் போன்

Realme c33 Mobile 2022


Realme c33 Mobile phone
Realme C33Mobile


ரியல்மீ நிறுவனம் கடந்த மாதங்களில் பல தரமான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதே வேலையில் சந்தையில் மற்ற போன்களுக்கு போட்டியாக Realme தங்களது போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகின்றது. அதேபோல் இந்த மாதம் இறுதியில் REALME C33 என்ற புதிய மாடல் போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போனை பற்றி விரிவாக இந்த பதிவில் நாம் காணலாம்.


வித்தியாசமான கலர் மாடல்கள் :


Realme c33 mobile phone



இந்த ரியல்மீ போன்கள் உங்களை கவர்ந்த கலர்களில் வரபோகிறது. இந்த Realme C33 போன்கள் சான்டி கோல்ட், அக்வா ப்ளூ, நைட் சீ போன்ற கலர்களில் வெளியிடபடும் என தெரிவிக்கபட்டுள்ளது. 


ரியல்மீ சீ33 டிஸ்ப்ளே :


இந்த போனின் டிஸ்ப்ளே 720×1600 ரிஸெலுஷனை பெற்றுள்ளது. இதன் பிபிஐ 270, இதன் டிஸ்பிளே அளவு 6.6 இன்ச் மற்றும் IPS LCD டிஸுப்பிளே கொடுக்கபட்டுள்ளது. இதில் 60Hz ரெஃபரெஷிங் ரேட் , 450நிட்ஸ் , 240Hz டச் சேம்பிளிங் மற்றும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் இந்த Realme C33 phone கொண்டு இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.




ரியல்மீ C33 கேமரா தரம் :


இந்த ஸ்மார்ட்போனில் கேமரா பொருத்தவரை பின்பக்கம் 3 கேமராக்கள் கொடுக்கபடுள்ளன. அவை 13MP ,( Wide ), AF 2MP f2.4, Macro 2MP, 2MP Depth sensor. மேலும் இதில் HDR சப்போர்ட், வீடியோ 1080P@30fps ல் எடுக்க முடியும். இதன் முன்பக்க கேமரா 5MP மற்றும் 720@30fps ல் வீடியோ எடுக்க முடியும்.


போனின் மெமரி அளவு ( Storage ) :


இந்த ரியல்மீ போன் ரேம் 3GB / 32GB ரோம் அளவிலும், 4GB/64GB, 4GB/128GB மாடலிலும் வெளிவரும் என கூறபட்டுள்ளது. மேலும் இதில் உங்களின் தேவைக்கு ஏற்றார் போல் மேமரியின் அளவை அதிகரித்துகொள்ள Memory card slot வசதி கொடுக்கபட்டுள்ளது. இதில் மைக்ரோ usb டைப் பயன்படுத்தபட்டுள்ளளது. இதில் புளுடூத் 5.0 , காம்பஸ், ஆக்ஸல்ரோமீட்டர், டால்பீன் அட்மாஸ் வசதியும் உள்ளது.

Realme C33 Mobile phone



5000mAh பேட்டரி திறன் :

இதில் 5000mah பவர் திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பயன்படுத்தபட்டுள்ளது. மற்றும் இந்த போனில் 10w பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் பெற்றுள்ளது. மேலும்  இந்த போனில் Fingerprint சென்ஸார் வசதியும் கொடுக்கபட்டுள்ளது.

ரியல்மீ சி33 ஃபிராசஸர் :


இந்த போனில் Unisoc Processor பயன்படுத்தபட்டுள்ளது. இந்த போனின் OS ஆன்ட்ராய்டு 11 இயங்குதளத்தையும் ரியல்மீ UI 2.0 பெற்றுள்ளது.

குறைவான விலை :


ரியல்மீ சி 33 போன் பட்ஜெட் விலையில் ரூபாய் 10,000  க்குள் அறிமுகம் ஆகும் என்று அறிவிப்பில்  கூறபட்டுள்ளது. இதன் மூலம் குறைவான விலையில் ஒரு நல்ல ஸுமார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல அதிஷ்ட்டமாக இருக்கும் என கருதபடுகிறது. 

மேலும் இந்த போன் இந்த மாத இறுதியில் வெளியிடபடும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்