அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

Ticker

6/recent/ticker-posts

அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் /குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். மேலும் அகவிலைபடி உயர்வுக்கான அறிவிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கபட்டு இருந்தது. 


ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு தற்ப்போது அகவிலைபடிக்கான உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17 சதவீதத்தில் இருந்த அகவிலைபடியை 1.1.2022 முதல் மேலும் 14 சதவீதம் உயர்த்தி 31 சதவீதமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.

மேலும் இந்த அகவிலைபடி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு 8724 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் பொங்கல் போனஸ் ஆக சி, டி பிரிவினருக்கு 3000 ரூபாய். ஓய்வூதியதாரர்களுக்கு 500 வழங்க முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்