இளம் வயதினரை தாக்கும் Fatty liver எதனால் ஏற்படுகிறது ?

Ticker

6/recent/ticker-posts

இளம் வயதினரை தாக்கும் Fatty liver எதனால் ஏற்படுகிறது ?

www.tamilantech.com


Fatty liver என்பது கல்லீரலில் ஏற்படும் வீக்கம். குறிப்பாக சொல்ல போனால் கல்லீரலில் அதிகபடியாக கொழுப்பு சேர்வதால் ஏற்படகூடிய ஒரு வகை நோய். இதை  கல்லீரல் கொழுப்பு நோய் என்று சொல்லபடுகிறது. நம்முடைய உடலை சுத்தம் செய்வதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. நாம் சாப்பிடகூடிய உனவுகளில் இருந்து கெட்ட கழிவுகளை பிரித்தெடுக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளை சரியான முறையில் செரிமான செய்வதும் இந்த கல்லீரல் தான். மேலும் நாம் சாப்பிட்ட உணவுகளில் இருந்து சத்துக்களை சேமித்து வைக்ககூடிய இடமாக இந்த கல்லீரல் திகழ்கிறது. Fatty liver desease


ஒரு நாள் முழுவதும் நாம் சாப்பிடாமல் இருந்தாலும் சில நேரங்களில் நமக்கு எதுவும் செய்வது இல்லை ஏனென்றால் கல்லீரலில் சேமித்து வைக்கபட்டுள்ள கொழுப்பு போதுமான ஆற்றலை நமது உடலுக்கு அனுப்புகிறது. இதனால் தான் ஒரு வேலை நாம் சாப்பிடாமல் இருந்தாலும் நமக்கு எந்தவிது பாதிப்பும் ஏற்படுவது இல்லை.


கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு ( fatty Liver)


கல்லீரலில் சாதாரனமாக ஏற்படும் கொழுப்பு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அவை அளவுக்கு மீறி அதிகமாக சேரும்போது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்று அதிகபடியாக படியகூடிய கொழுப்பு கல்லீரலில் அழற்ச்சி, கல்லீரல் வீக்கம் , கல்லீரல் புன், கல்லீரல் தழும்பு போன்ற பாதிப்பை முதலில் ஏற்படுத்துகின்றன. நாளடைவில் இது கல்லீரலில் புற்றுநோய் வரகூட வழி வகுக்கும். மேலும் புற்று நோய் வராமலும் கல்லீரல் செயலிழுக்கும்


கல்லீரலில் எப்படி கொழுப்பு அதிகமாக படிகிறது ?


இந்த கொழுப்பு கல்லீரல் நோய் நாம் உன்னக்கூடிய ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்தே ஏற்படுகின்றன என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இந்த நோய் தற்ப்போது அதிகமாக இளைய தலைமுறையினரை அதிகமாக பாதிக்கபடுகின்றனர்.ஏனென்றால் தற்ப்போது உள்ள சூழலில் இளம் வயதினர் அதிகமாக (Fastfood ) துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.



மேலும் நொறுக்கு தீனி snacks என்று சொல்லிகொன்டு காலை மாலை என்று கன்டதையும் போட்டு விழுங்குகின்றனர். தற்ப்போது டீ கடைகளில் விற்க்கபடும் போன்டா, பஜ்ஜி, சமோசா, வடை , பானிபூரி oil food  என்று சாப்பிடுகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக ஒருவர் சாப்பிடும் பொழுது அதில் உள்ள என்னைகள் நமது கல்லீரலில் அதிகபடியான கொழுப்பாக தங்கிவிடுகின்றன. 



Fatty Liver அறிகுறிகள் என்ன ?

இந்த நோய் இருப்பது நமது உடலில் ஆரம்பநிலையில் தெரியாது. 50% அளவு கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்திய பிறகுதான் அதன் அறிகுறி வெளிபடும். சில நேரங்களில் வேறு ஏதாவது சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்லும் போது நமது வயிற்றுபகுதியை ultra sound Scan செய்யும் போது Fatty liver இருப்பது தெரியவரும். எனவே வருடத்திற்க்கு ஒருமுறையாவது நமது உடலை முழு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

முக்கிய அறிகுறிகள் 

1) பசியின்மை

2) சோர்வு

3) குமட்டல்

4) வயிற்றின் வலதுபக்கம் லேசான வலி ( lever pain )

5) அதிகபடியான வயிற்று வலி ( heavy pain )

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அனுகி உடல் பரிசோதித்துகொள்வது நல்லது.ஏனென்றால் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் எளிதாக சரிசெய்துவிடாலாம். கடைசி நிலைக்கு சென்றுவிட்டால் கல்லீரலை இழக்க நேரிடும். இறுதியாக உயிரை பறித்துவிடும். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து விட்டால் சாதாரனமாக நமது உணவு முறையில் மாற்றம் செய்தாலே Fatty liver தானாகவே சரியாகிவிடும்.

Fatty Liver வர முக்கியமான காரணங்கள் என்ன ?

1) உடற்பயிற்ச்சியின்மை 

2) ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல்

3) குடிபழக்கம்

4) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது.



5) என்னெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவது. சமோசா, வடை ,பஜ்ஜி, போன்டா, நூடுல்ஸ், பிரியானி, பிரைடுரைஸ், பொரித்த மீன் வறுவல், அப்பளம் , வத்தல், மட்டன்.

6) சர்க்கரை கலந்த இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது

7) அதிகமாக நெய், வெண்னெய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வது.

8) மாமிச உணவுகள்

9) Fast food  அதிமாக சாப்பிடுவது - பரோட்டா, 

10) சாக்லேட் அதிகமாக சாப்பிடுவது

11) அதிக உடல் எடை



இது போன்றா உணவுகளை நாம் குறைத்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. முடிந்த அளவு உணவு கட்டுபாடுகளை சரியாக கடைபிடித்தாலே இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக நம்மை காத்து கொள்ள முடியும்.


நன்றி!


கருத்துரையிடுக

0 கருத்துகள்