E-Bike வெடிப்பதற்கான மிக முக்கியமான காரனம் என்ன ?

Ticker

6/recent/ticker-posts

E-Bike வெடிப்பதற்கான மிக முக்கியமான காரனம் என்ன ?

E-bike பயன்படுத்துவோர் அதனை பயன்படுத்தும் முறையினை சரியாக அறிந்து இருத்தல் வேண்டும்.மேலும் அதனை சரியான முறையில் பராமரித்தல் வேண்டும்.


1) மேலும் இந்த bike ஐ விற்க்ககூடிய நிறுவனங்கள் எப்படி பயன்படுத்தவேண்டும். எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் போன்றவற்றை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக எடுத்து கூறுவது இல்லை

2) இந்த Bike ஐ அனைவரும் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விலை குறைவாக விற்பனை செய்வதற்க்கு அதில் தரம் குறைவான பேட்டரிகளை பயன்படுத்தவதனால் இது போன்ற வெடிப்புகள் ஏற்பட காரனமாக அமைகின்றன.


www.tamilantech.com


3) இது போன்ற பைக்குகளை சார்ஜ் செய்யும் போது சரியான காற்றோட்டம் இல்லாத பகுதியில் வைத்து சார்ஜ் செய்தால் அதிக சூடாகி வெடிக்ககூடும்

4) சார்ஜரில் எதாவது பழுது ஏற்பட்டு  இருந்தால் அதிக படியான மின்சாரம் சென்று பேட்டரி வெடிக்க நேரிடும்.

5) நாம் பயன்படுத்தும் சார்ஜர் Bike ல் பொருத்த பட்டு இருக்கும் பேட்டரியின்  Amp மற்றும் voltage க்கு சரியான அளவில் இருக்க வேண்டும்.இவைகள் மாறும் போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

6) வெயில் படகூடிய இடத்தில் பைக்கை வைத்து சார்ஜ் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படி சார்ஜ் செய்தால் பைக்கில் உள்ள பேட்டரி மேலும் அதிகபடியான வெப்பமமாகி வெடிக்க நேரிடும்.

7) Fast charging - வேகமாக சார்ஜிங் செய்ய கூடிய சார்ஜர்களை நாம் பயன்படுத்துவதனால் பேட்டரிகள் வெடிக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

8) இது போன்ற E-Bike ஐ மழை காலங்களில் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். மழை தன்னீர் உள்ளே சென்றால் short ஆகி பேட்டரி வெடிக்க நேரிடும்.


www.tamilantech.com


9) lithium ion மற்றும் lithuium phosphate Batteries இந்த வகை பேட்டரிகளில் சார்ஜ் செய்யும் போது அதில் இருந்து ஒரு வித Gas வெளிபடும். இந்த வகை Gas எரியும் தன்மை கொண்டவை. இவைகள் எப்போதுமே எளிதில் தீ பற்றகூடியவை இதன் மூலமாக பேட்டரி தீ பற்றி பைக் முழுவது வெடிக்க நேரிடும். எனவே பாதுகாப்பாக பயன்படுத்துவதே சிறந்தது.

10) இரவு முழுவதும் சார்ஜ் செய்ய கூடாது. இப்படி செய்யும் போது. ( Over charging )அளவுக்கு அதிகமாக மின்சாரம் சென்றாலும் இந்த வகை பேட்டரிகள் எளிதாக வெடித்துவிடும்.

11) மேலும் Bike ஐ வீட்டில் சார்ஜ் செய்யும் போது plug point loose connection இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

12) முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகு Auto cutt off charging protection முறை அந்த பைக்கில் இருந்தால் பேட்டரி வெடிப்புகளை எளிதாக தவிர்க்கலாம்.


www.tamilantech.com


13) இந்த வகை Battery ல் அதிகபடியான ( stress and vibration ) அழுத்தம் கொடுக்கும் போது இவைகள் எளிதாக வெடிக்கின்றன.

14) இந்த வகை bike - களில் electrical shortage ஆகாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால்  தீ பற்றுவதற்க்கு மிக மிக முக்கிய காரணம் இதன் மூலம் தான். ( short electrical )

மெலே குறிப்பிடபட்டுள்ள இது போன்ற  காரணங்களால் தான் அதிமாக electric bike தீ விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. இது போன்ற E-bike ஐ பயன்படுத்துவோர் மிக கவனமாக இருந்தால் மட்டுமே விபத்துக்களை நம்மால் தடுக்க முடியும்.

நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்